2009-10-14 16:14:47

வானியல் ஆண்டையொட்டி பழைய வானியல் ஆய்வுக் கருவிகள் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் 


அக்.14,2009 வத்திக்கான் அருங்காட்சியகத்தில் நானூறு ஆண்டுகள் பழமையுடைய வானியல் ஆய்வுக் கருவிகள் இவ்வெள்ளி முதல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக திருப்பீட கலாச்சாரத்துறைத் தலைவர் பேராயர் ஜான்பிராங்கோ ரவாசி அறிவித்தார்.

இது குறித்த நிருபர் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய பேராயர் ரவாசி, தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச வானியல் ஆண்டையொட்டி, அக்டோபர் 16 முதல் ஜனவரி 16ம் தேதி வரை, இந்தப் பழைய வானியல் ஆய்வுக் கருவிகள் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.

வத்திக்கான் வானியியல் ஆய்வு மையம், இத்தாலிய தேசிய வானியல் மையம், வத்திக்கான் அருங்காட்சியகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் அறிவித்தார்.
மேலும், இம்மாதிரியான நிகழ்வு, இதற்கு முன்னர் 1929ம் ஆண்டிலும் 1958ம் ஆண்டிலும் இடம் பெற்றதாக இந்த அருங்காட்சியக நிகழ்வை முன்னின்று நடத்தும் இலெயானா சின்னிச்சி நிருபர் கூட்டத்தில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.