2009-10-14 16:15:54

"மாற்று நோபெல் பரிசுகள்" பட்டியல் 


அக்.14,2009 இன்றைய உலகில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நடைமுறைக்கு ஏற்ற, சிறப்பான வழிகளைக் கண்டுபிடிப்பவர்களைக் கௌரவிக்கும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த வாழ்வு ஆதார உரிமை (Right Livelihood ) என்ற அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை அறிவிக்கிறது.

"மாற்று நோபெல் பரிசுகள்" என்று மக்களிடையே பரவலாகப் புகழ் பெற்ற இந்த விருதுகள், 1980 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டிற்கான விருதுகள் அடங்கிய பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறுப்புள்ள வகையில் அறிவியலைப் பயன்படுத்தினால், நமது சுற்றுச் சூழலை அழிவினின்று பாதுகாக்க முடியும் என்ற கருத்தைப் பன்னாட்டு அரங்குகளில் வலியுறுத்துவதைத் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கடைப்பிடித்து வரும் கனடா நாட்டின் அறிவியலாளர் டேவிட் சுஸுகி, எத்தியோப்பிய மக்களிடையே, சிறப்பாக, பெண்கள் மத்தியில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவ பணி புரிந்து வரும் ஆஸ்திரேலிய நாட்டு மருத்துவர் கேத்தரின் ஹெம்லின், காங்கோவின் மழைகாடுகளைப் பல ஆண்டுகளாக அழித்துவரும் பெறும் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வரும் ரெனே ங்கோங்கோ, அமைதிக்கானக் கல்வியைப் புகட்டுவதிலும், ஆயுதம் களைவதில் அரசியலாளர்களை ஒன்றிணைப்பதிலும் கடந்த இருபது ஆண்டுகளாக உழைத்துவரும் நயுசிலாந்து நாட்டு அலின் வேர் - ஆகிய நால்வரும் இவ்விருதுகள் பெறுவோரின் பட்டியலில் இவ்வாண்டு சிறப்பிடம் பெறுகிறார்கள் என்று செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.