2009-10-12 13:55:05

வரலாற்றில் அக்டோபர் 13 புனித எட்வர்ட்


இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டப்பட்ட எட்வர்ட், சாந்தமும் நீதியும் விவேகமும் தலைவர்களுக்கு மிக மிகத் தேவை என்பதை வலியுறுத்தினார். அதை வாழ்ந்தும் காட்டினார். 23 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர் தம் நாட்டுக்கு வரவிருந்த தீமைகளை முன்னறிவித்தார். “நாட்டில் தீமை அதிகரிக்கும் போது கடவுள் கோபத்துடன் தீய சக்திகளை மக்களிடையே அனுப்புவார். அவை மக்களைக் கடுமையாய்த் துன்புறுத்தும். பச்சைக்கிளை தாய் மரத்திலிருந்து வெகு தூரம் செல்லும். இருந்தாலும் இரக்கம் நிறைந்த இறைவன் இறுதியில் அதனை தாய் மரத்துடன் இணைத்து விடுவார். பின்னர் அது செழித்து கனிதரும்” என்று அவர் முன்னறிவித்தது பின்னர் நிறைவேறியது. சாந்தத்தாலும் நீதியாலும் மக்களை ஆட்சி செய்தார்.

54 – நீரோ உரோமைப் பேரரசரானார்.

1582 - கிரகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை

1917 – போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவி்ன் கோவா த லிரியாவில் அன்னைமரியா நிகழ்த்திய "சூரியனின் புதுமை" என்ற அற்புதத்தை சுமார் 70 ஆயிரம் பேர் கண்டனர்.

1923 - துருக்கியின் தலைநகர், இஸ்தான்புலிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது








All the contents on this site are copyrighted ©.