2009-10-12 13:55:23

தீபாவளிச் சிந்தனைகள்


அக்.12,2009 உங்களில் பலர் தீபாவளி ஒளி விழாவைச் சிறப்பிப்பதற்கு தயாரித்து வருகிறீர்கள். தீபாவளி என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன எண்ணத்தில் மனதில் வருகிறதோ தெரியாது, ஆனால் எமக்கோ, மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி என்று தோன்றுகிறது. ஒரு கள்வன் தான் கொள்ளையடிப்பவனில் ஏற்படுத்தும் காயத்தைவிட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் காயங்கள்தான் அதிகம். தனது செயலுக்குப் பலியானவனைச் சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னை விஷம் தோய்ந்த ஆயுதத்தால் குத்திக் கொள்கிறான். நம்மை நாமே புண்படுத்திக் கொள்ளாமல் பிறரைப் புண்படுத்துவது என்பது இயலாத காரியம். இது நமது படைப்பின் இலக்கணம். எனவே நமக்கு நாமே நல்லவர்களாக இருந்தால் மற்றவர்களுக்கும் நல்லவர்களாக இருப்போம். ஆக இதற்குத் தடையாக இருக்கும் இருட்டை அகற்ற முயற்சிகள் எடுத்தால் விழாக்கள் சிறப்படையும். நல்லவர்களுக்கு நாளெல்லாம் தீபாவளிதானே. இதோ தீபாவளிச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் திருமதி சிறிய புஷ்பம். இவர், மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு RealAudioMP3 பெற்றிருப்பவர்.

ஒரு புகழ் பெற்ற சூரியக் கடிகாரத்தில், நான் சூரியன் ஒளிரும் நேரத்தை மட்டும் பதிவு செய்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதுவே நம் ஒவ்வொருவரது வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தால் நமது வாழ்க்கையும் பொலிவடையும் அல்லவா.

மண்ணிலிருந்து சீறிச்சென்று,

விண்ணைத்தேடி ஏறிச்சென்று,

வானத்தினை வர்ணமாக்கிடும்...

வண்ணதுளிகளைப் போல - நம்

வாழ்க்கையையும் வண்ணமயமாக்கட்டும்..

தீபாவளி தீபத்திருவொளி!








All the contents on this site are copyrighted ©.