2009-10-12 13:37:33

சமுதாயத்தில் மிகவும் ஏழைகள் மற்றும் மிகவும் நலிந்தவர்களுக்குச் சேவையாற்ற திருத்தந்தை அழைப்பு


அக்.12,2009 ஞாயிறு விழாத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை நிகழ்த்திய மூவேளை செப உரையில், இப்புதிய புனிதர்களின் சாட்சிய வாழ்வின் விழுமியங்கள் பற்றி மீண்டும் எடுத்துச் சொன்னார்.

பல மொழிகளில் ஆற்றிய உரைகளில், ப்ரெஞ்ச் மொழியில் பேசிய போது புனித ஜான் ஜூகனைப் பின்பற்றி, சமுதாயத்தில் மிகவும் ஏழைகள் மற்றும் மிகவும் நலிந்தவர்களுக்குச் சேவையாற்ற அவர் அழைப்பு விடுத்தார்.

அன்பின்மை, புறக்கணிப்பு, அறியாமை போன்ற தொழுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்நோயாளர் மத்தியில் வேலை செய்வோருக்கு செபம் மற்றும் தாராள உள்ளத்துடன் உதவிக்கரம் நீட்டுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

தற்சமயம் வத்திக்கானில் நடைபெற்று வரும் ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவைக்காகச் செபிக்குமாறும் விசுவாசிகளிடம் அவர் கூறினார்.

இன்னும், இந்த ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்டு அவரின் ஆசீர் பெற வந்திருந்த இரண்டாம் உலகப் போரின் போது, ஹிரோஷிமா, நாகசாசி ஆகிய நகரங்களில் அணுகுண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பயணிகளை வரவேற்ற திருத்தந்தை, உலகம் இத்தகைய பெரும் அழிவுகளுக்கு மீண்டும் சாட்சியாக இல்லாதிருக்கத் தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.