2009-10-09 14:40:05

பேச்சு சுதந்திரம் உரிமை மட்டுமல்ல, அது வலுப்படுத்தப்பட வேண்டியதன் கடமையையும் கொண்டுள்ளது, பேராயர் தொமாசி


அக்.09,2009 பேச்சு சுதந்திரம் உரிமை மட்டுமல்ல, அது வலுப்படுத்தப்பட வேண்டியதன் கடமையையும் கொண்டுள்ளது என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.

சமய சுதந்திரம் பற்றி நடை பெற்ற மனித உரிமைகள் அவையின் 12வது அமர்வில் உரையாற்றிய பேராயர் தொமாசி, பேச்சு சுதந்திரமானது, கருத்துப் பரிமாற்றங்களுக்கும் எண்ணங்களைச் செயல்படுத்துவதற்குமான வாய்ப்புகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

உலகில் ஏறத்தாழ அனைத்து சிறுபான்மை மதத்தவரும் பாகுபடுத்தப்பட்டு வரும் வேளை, இதற்கு ஒரு திட்டவட்டமான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று திருப்பீடம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூகத் தொடர்பு சாதனங்கள், மதத்தவரின் சமயக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் சமய நடைமுறைகளையும் அனுபவத்தையும் மத உணர்வுகளையும் அடிக்கடி புறக்கணிப்பது போல் அல்லது ஓரங்கட்டுவது போல் தெரிகின்றது, இது நியாயமான சமயக் குழுக்ககளை வெறுப்புடன் நோக்குவதற்கு வழி அமைக்கக்கூடும் என்றும் பேராயர் தொமாசி எச்சரித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.