2009-10-08 15:58:35

தமிழருக்கு 2009-ம் ஆண்டுக்கான வேதியியல் நொபெல் பரிசு


அக்.08,2009 அமெரிக்கா வாழ் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவருக்கு 2009-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.ஏயின் தகவல்களை உடற்பாகங்களின் குணாதிசயங்களாக மாற்றம் செய்யும் ரைபோசோம்களின் கட்டமைப்பை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது

இவர்களது இந்த கண்டுபிடிப்பு புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளைத் தயாரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசு குழு கூறியது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட 57 வயதாகும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தற்சமயம், இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

சர் சி.வி.ராமன், எஸ். சந்திரசேகர் ஆகியோரை அடுத்து நோபல் பரிசு பெறும் 3-வது தமிழர், ஏழாவது இந்தியர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பெருமை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது

மேலும், அமெரிக்கரான தோமஸ் ஸ்டிட்ஸ், இஸ்ரேலியரான பெண் அடா யொனாத் ஆகியோரும் இவ்வருடத்துக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்கள்.

அடா யோனாத் வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெறும் நான்காவது பெண்மணியும், கடந்த 40 ஆண்டுகளில் நொபெல் பரிசை பெறும் முதல் பெண்மணியும்

ஆவார்.












All the contents on this site are copyrighted ©.