2009-10-08 15:57:25

கிறிஸ்தவ நலப் பணியாளர் கொலையுண்டதை அடுத்து, கிறிஸ்தவர்கள் வெளியேறுவது வேதனை - பேராயர் லூயிஸ் சாகோ 


அக். 08, 2009 அண்மையில் ஈராக்கின் கிர்குக் என்ற இடத்தில் கடத்திச் செல்லப்பட்ட கிறிஸ்தவ நலப் பணியாளர் இமாத் எலியாஸ் அப்துல் கரீம் கொலையுண்டதை அடுத்து, அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் வெளியேற ஆரம்பித்திருப்பது வேதனையைத் தருவதாக பேராயர் லூயிஸ் சாகோ தெரிவித்தார். எலியாஸ் அப்துல் கரீம் சென்ற வார இறுதியில் கடத்தப்பட்டதும் பேராயர் அவரது விடுதலைக்காக விண்ணப்பித்து, தான் தொடர்பு சாதனங்களில் பேசியது பலனளிக்காமல் கரீம் கொல்லப்பட்டது கிறிஸ்தவ மக்கள் மனதில் பயத்தை உண்டாக்கி யிருப்பதாக பேராயர் கூறினார்.
இராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் அந்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வந்தாலும் அவர்களை நாட்டை விட்டு துரத்துவதற்கு ஒரு சில அடிப்படை வாதக் குழுக்கள் மேற்கொள்ளும் இது போன்ற அச்சுறுத்தும் முயற்சிகள் கண்டனத்திற்குரியவை என பேராயர் சாகோ செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.