2009-10-07 17:25:35

தமியானின் உருவத்தை முடக்கு வாதமுற்ற ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார்


அக். 07, 2009 வருகிற ஞாயிறன்று புனிதராக உயர்த்தப்படும் தமியானின் உருவத்தை முடக்கு வாதமுற்ற ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார் எனவும், அந்த ஓவியம் வருகிற அக்டோபர் 14 அன்று திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்படும் எனவும் செய்திகுறிப்பு ஒன்று கூறுகிறது.
"மலாக்கா தீவில் தமியான்" என்ற தலைப்பில் 8 அடிக்கு 4 அடி அளவிலான இந்த ஓவியத்தை ஹவாய் தீவில் வாழ்ந்த பெக்கி சுன் என்ற ஓவியர் தீட்டியுள்ளார். முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தன் உடல் தொடர்ந்து செயலிழந்து வருவதையும் பொருட்படுத்தாமல், இந்த ஓவியத்தை வரைய ஆரம்பித்தார். 2007 ம் ஆண்டு அவர் உடல் முற்றிலும் செயல் இழந்ததால், குளிவூவூ என்ற இடத்தில் உள்ள தமதிருத்துவ பள்ளி மாணவ, மாணவியரின் உதவியுடன் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தார். இந்தப் பெண் ஓவியர் வரைந்த கடைசி ஓவியம் இது என்பது குறிப்பிடத் தக்கது. ஓவியத்தை முடித்த சில மாதங்களில் பெக்கி சுன் இறையடி சேர்ந்தார்.  இந்த ஓவியம் அக்டோபர் 11 ம் தேதி ரோமை நகருக்கு கொண்டு வரப்படுகிறது. எந்த செலவும் இல்லாமல் இந்த ஓவியத்தை ரோமை நகருக்கு கொண்டு வர டெல்டா விமான சேவை முன் வந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.