2009-10-07 17:25:08

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பின மக்கள் முழு சுதந்திரம் பெற வேண்டியுள்ளதென அட்லாண்டா பேராயர்


அக். 07, 2009 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பின மக்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தபோதும், இன்னும் அவர்கள் முழு சுதந்திரமும், சமுதாயத்தில் முழுமையான ஏற்பும் பெற வேண்டியுள்ளதென அட்லாண்டா பேராயர் வில்டன் கிரகரி கூறியுள்ளார்.
ரோமையில் இப்போது நடைபெறும் ஆப்ரிக்காவுக்கான இரண்டாம் சிறப்பு ஆயர் பேரவைக்குச் சிறப்பு பிரதிநிதியாக அழைக்கப்பட்டுள்ள பேராயர் கிரகரி பேரவையில் உரையாற்றுகையில் ஆமோஸ் இறைவாக்கினரின் கூற்றான "நீதி ஆறாகப் பெருகி ஓட வேண்டும்" என்ற கூற்றை இன்னும் அமேரிக்கா முழுதாக நடைமுறை படுத்த வேண்டும் என அமெரிக்கக் கறுப்பின மக்களின் நாயகனாய் இருக்கும் மார்ட்டின் லூதர் கிங் கூறியதை சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.