2009-10-06 17:14:23

வரலாற்றில் அக்டோபர், 06செபமாலை அன்னையின் திருநாள்


1571 ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் லெபான்டோ (Lepanto) என்ற இடத்தில் துருக்கியர்களின் படைகளை முறியடித்து ஐரோப்பிய படைகள் வெற்றி அடைந்தன. இந்த வெற்றி ஐரோப்பாவில் கிறிஸ்தவ வாழ்வு முறையைப் பாதுகாக்க பெரிதும் காரணமாய் இருந்தது. எனவே அப்போது திருத்தந்தையாய் இருந்த புனித ஐந்தாம் பியுஸ், வெற்றியின் அன்னை என்று ஒரு திருநாளைக் கொண்டாட அக்டோபர் 7 ம் நாளை குறித்தார். பின்னர் வந்த திருத்தந்தையர் இந்த வெற்றி செபமாலை வழியாக வந்ததால், இதை செபமாலை அன்னையின் விழாவாகக் கொண்டாடப் பணித்தனர்.
செபமாலை சொல்வது 13 ம் நூற்றாண்டில் புனித தொமினிக் வழியாக ஆரம்பமான ஒரு பக்தி முயற்சி. திருத்தந்தை பத்தாம் லியோ இந்த பக்தி முயற்சியை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்து, அக்டோபர் மாதத்தை செபமாலைக்கென ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் வாழ்வில் பிறப்பின் வழி வந்த மகிழ்வு, மரணத்தின் வழி வந்த துக்கம், உயிர்ப்பின் வழி வந்த மகிமை என்று மூவகை மறை உண்மைகளை தியானித்து செபித்து வந்த கிறிஸ்தவ பாரம்பரியத்தில் 2002 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருத்தந்தை 2 ம் ஜான் பால் இயேசுவின் பணி வாழ்வைத் தியானிக்கும் வகையில் ஒளி மயமான மறை உண்மைகள் என்று ஐந்து நிகழ்வுகளை சேர்த்தார்.







All the contents on this site are copyrighted ©.