2009-10-06 18:06:52

தென்னிந்தியாவின் வெள்ள நிவாரணப் பணியில் திருச்சபை 


அக். 06, 2009. அண்மைப் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் பெல்லாரி மறை மாவட்டத்தில் அனைத்து கத்தோலிக்கக் கட்டிடங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கென திறந்துவிடப் பட்டுள்ளதாக அம்மறைமாவட்டம் அறிவித்தது.

கடந்த 50 ஆண்டுகளின் மிகப்பெரும் வெள்ளப் பேருக்கான இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் குறித்து ஆராயவும், இழப்புகளைக் கணக்கிடவும் இவ்வியாழனன்று கர்நாடகாவின் வட பகுதி ஆயர்கள் ஒன்று கூடி விவாதிக்க உள்ளனர்.
இதற்கிடையே, ஆந்திராவில் பெருமளவில் பாதிப்படைந்துள்ள கர்நூல் மறை மாவட்டத்தில் பல மையங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் 30 குரு மாணவர்கள் மற்றும் பல சுய விருப்பப் பணியாளர்களின் உதவியுடன் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தார், அம்மறைமாவட்ட ஆயர் அந்தோனி பூலா.







All the contents on this site are copyrighted ©.