2009-10-05 14:29:42

வரலாற்றில் அக்டோபர் 06 தவமுனிவரான புனித புரூனோ விழா


புரூனோ இவர் 1030இல் ஜெர்மனியின் கொலோன் நகரில் பிறந்தார். 25வது வயதில் குருவான இவர், உரோமையிலும் பிற இடங்களிலும் குருக்களிடையே பெருகிக் கிடந்த அட்டூழியங்களையும் அவலங்களையும் களைந்தெறிவதில் திருத்தந்தை 7ஆம் கிரகரிக்கு வலக்கை போல் இருந்து உழைத்தார். 20 ஆண்டுகள் பள்ளிகளை நிர்வகித்து வந்தார். இருப்பினும் இவரது கவனமெல்லாம் தனிமையை நாடி செபதபத்தில் நாட்களைச் செலவிடுவதில் இருந்தது. இவரது திட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்ட 6 இளைஞருடன் சேர்ந்து ஷார்ட்ரூட்ஸ் மலைப்பகுதியில் மெளன செபதப முயற்சிகளைத் தொடங்கினார். கடும் ஏழ்மையிலும் மெளனத்திலும் கடும் தபத்திலும் இவர்கள் வாழ்ந்தனர். இதுவே கர்த்தூசியன் துறவு சபை ஆரம்பமாகக் காரணமாயிருந்தது. லூத்தர் கிளர்ச்சி செய்து பிரிந்து போன காலத்தில் மேலை நாடுகளில் 195 கர்த்தூசியன் மடங்களிருந்தன. இன்று ஏறத்தாழ 500 மெளன துறவிகளும் இதேபோல் மூன்று மடங்கு பெண் துறவிகளும் இச்சபையில் இருக்கின்றனர்.

1582 - கிரெகோரியன் நாட்காட்டி அமல்டுத்தப்பட்டதையடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை

1870 - ரோம் இத்தாலியின் தலைநகரானது

1889 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்

1921 – சர்வதேச வழக்கறிஞர் கழகம் இலண்டனில் நிறுவப்பட்டது.

1979 – அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதல் திருத்தந்தையானார் பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல்.

1987 - பீஜி குடியரசாகியது.








All the contents on this site are copyrighted ©.