2009-10-03 15:05:36

பெண்கள், சிறுமிகள், இவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கானத் தங்கள் அர்ப்பணத்தினின்று நாடுகள் ஒதுங்கிவிடக் கூடாது, ஐ.நா.பொதுச் செயலர்


அக்.03,2009 தற்சமயம் உலகு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் குறிப்பாக அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கானத் தங்கள் அர்ப்பணத்தினின்று நாடுகள் ஒதுங்கிவிடக் கூடாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

பெண் குழந்தை குறித்த தனது அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ள பான் கி மூன், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் ஏழ்மை சிறாரின் வாழ்வில், குறிப்பாக சிறுமிகளின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாதிருப்பதில் கவனமாக இருக்குமாறும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1980 களிலும் 1990 களிலும் ஆசியாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இடம் பெற்ற நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்தது, இன்னும் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை குறைந்தது என்றும் பான் கி மூனின் அறிக்கை கூறுகின்றது.

2015ம் ஆண்டுக்குள் உலகளாவிய வறுமையையும் பசியையும் பிற தீமைகளையும் குறைப்பது குறித்து நாடுகள் இசைவு தெரிவித்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்த இலக்கானது ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினால் இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.