2009-09-30 17:19:31

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


செப். 30. கடந்த வார இறுதியிலும் இவ்வார துவக்கத்திலும் என மூன்று நாள் பயணத்தை செக் நாட்டில் நிறைவேற்றித் திரும்பியுள்ள நம் பாப்பிறை 16ம் பெனடிக்ட், அத்திருப்பயணம் குறித்தே இன்றைய பொதுமறைபோதகத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.



செக் நாட்டிற்கான என் அண்மை அப்போஸ்தலிக்கப் பயணம், ஒரு திருப்பயணமாகவும், மறைப்பணி தொடர்புடையதாகவும் இருந்தது. தங்களின் வாழ்வு மூலம் செக் மண்ணில் கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்ந்த பல புனிதர்களோடு தொடர்புடையதாக இது இருந்ததால், ஒரு திருப்பயணமாக இருந்தது. மற்றும் இயேசுவை பின் தொடர்வதில் கிட்டும் நம்பிக்கையையும் மகிழ்வையும் இக்காலத்தில் மீண்டும் கண்டு கொள்ளவேண்டிய தேவையில் ஐரோப்பா இருப்பதால் இது மறைப்பணி பயணமாக நோக்கப்படுகிறது. ப்ராக்கின் மிக உன்னத பேராலயத்திலும், ப்ரொனோ மற்றும் ஸ்தாரா பொலெஸ்லாவிலும் நிகழ்த்தப்பட்ட திருவழிபாட்டுக்கொண்டாட்டங்கள், விசுவாசத்தை ஆழப்படுத்தவும், மத்திய ஐரோப்பிய மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கிறிஸ்தவ அர்ப்பணத்தை தூண்டியெழுப்பவும் உதவ வேண்டும் என ஜெபிக்கிறேன்.

அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அனைத்து சமூக மற்றும் திருச்சபைத் தலைவர்களுக்கு, குறிப்பாக அரசுத்தலைவர் வாக்ளாவ் க்ளாவ்ஸ் மற்றும் கர்தினால் மிலோஸ்லாவ் உல்க்குக்கு என் நன்றியை வெளியிடுகிறேன். பிற கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை சந்தித்து கிறிஸ்தவ ஐக்கியப் பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு ஊக்கமளிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன். செக் பல்கலைக்கழக அதிபர்களுடனும் கலாச்சார உலகின் முக்கியத் தலைவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த வாய்ப்பு பெரும் மகிழ்வு தரும் ஒன்றாக இருக்கிறது. கல்வியின் மேன்மைதன்மை என்பது உண்மையில் தன் மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என அவர்களிடம் பேசினேன். இந்த என் அண்மை திருப்பயணமானது செக் மக்களுக்கு அபரிவிதமான ஆன்மீகக் கனிகளைப் பெற்றுத் தரவேண்டும் எனவும், ஐரோப்பியக் கண்டத்திற்கு அமைதியையும் ஐக்கியத்தையும் கொணர உதவவேண்டும் எனவும் என்னோடு இணைந்து செபிக்குமாறு உங்களனைவரையும் வேண்டுகிறேன்.








All the contents on this site are copyrighted ©.