பிலிப்பைன்ஸ் தலத் திருச்சபை செய்துவரும் வெள்ள நிவாரணப் பணிகள்
பிலிப்பைன்சில் அண்மைப் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் தற்காலிகமாக,
தங்குவதேற்கென தன் பள்ளிகளையும், பல்வேறு நிறுவனங்களையும், கோவில், கட்டிடங்களையும் திறந்துவிட்டுள்ளது
பிலிப்பைன்ஸ் தலத் திருச்சபை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, போர்வை, கொசுவலை, தரை
விரிப்புகள் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை உடனடியாக வழங்கி வருகிறது அமெரிக்க ஐக்கிய
நாட்டு ஆயர்களின் கீழ் இயங்கும் CRS என்ற கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பு. பிலிப்பைன்சில்
அண்மைப் பெருமழையைத் தொடர்ந்து மணிலாவும் ஏனைய 23 மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.