2009-09-27 16:21:11

இன்றைய புனிதர்: புனித வென்செஸ்லாஸ்


போஹீமியா நாட்டு இளவரசரான வென்செஸ்லாஸ் அவரது பாட்டியான புனித லுட்மில்லா என்பவரது கண்காணிப்பில் பக்தியில் வளர்ந்தவர். சிறுவயது முதல், நற்கருணை மட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரது தந்தையின் மறைவுக்குப் பின் வேறு மதம் சார்ந்த அவரது தாய், த்ராகோமிர் அரச பீடம் ஏறி, கிறிஸ்துவத்தை அழித்துவிட முயன்றார். மக்களின் விருப்பத்திற்கு செவி மடுத்து, வென்செஸ்லாஸ் அரச பதவியை ஏற்று, மீண்டும் கிறிஸ்துவத்தை நிலை நாட்டினார். இதனால், பலரும் இவருக்குப் பகைவரானார்கள். அவருக்கு ஒரு மகன் பிறந்ததால், தன் அரசு உரிமையை இழந்ததாக நினைத்த அவரது தம்பி, போலெஸ்லாவ், இவரைத் தன் வீட்டில் விருந்துண்ண அழைத்தான். விருந்துக்குச் செல்லும் வழியில், வென்செஸ்லாஸ் வழக்கம் போல் திவ்ய நற்கருணையைச் சந்திக்க கோவிலுக்கு போகும்போது, கோவில் வாசலிலேயே, அவரது தம்பி அவரைக் குத்திக் கொன்றார். "இறைவன் உன்னை மன்னிப்பாராக." என்ற வார்த்தைகளுடன் வென்செஸ்லாஸ் உயிர் துறந்தார். முன்பு செகொஸ்லோவாக்யா என்று கூறப்பட்ட நாட்டின் பாதுகாவலர் புனித வென்செஸ்லாஸ்.







All the contents on this site are copyrighted ©.