2009-09-25 16:04:31

மங்களூரில் தசரா கொண்டாட்டங்கள் மத நல்லிணக்கத்தை உருவாக்கி வருகின்றன. 


செப். 26, 2009 மங்களூரில் கொகர்ணநாதேஸ்வர கோவில் நிர்வாகிகள் தற்போது நடந்து வரும் தசரா கொண்டாட்டங்களுக்கு அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். செப். 19 ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்களாய் தொடர்ந்து வரும் இந்த கொண்டாட்டங்களில் ஏழு பெதனி கன்னியர்கள் உட்பட, பல கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவின் போது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் அனைவரும் சுதந்திரமாய் பேசி, வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் அண்மையில் இப்பகுதிகளில் நிலவி வந்த ஐயம், பயம் இவை நீங்கயுள்ளதென அருட்சகோதரி பிரேமா செய்தியாளர்களிடம் கூறினார்.

அருட்சகோதரிகளுக்குரிய உடையுடன் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் தயக்கம், பயம், இருந்தாலும், போகப் போக நிலைமை சுமுகமாகியது என்று அருட்சகோதரி கூறினார்.
கோவில் நிர்வாகக் குழுவின் அங்கத்தினர்கள் தனித்தனியாகச் சென்று பிற மத அமைப்பின் அங்கத்தினர்களுக்கு அழைப்பு விடுத்ததாக நிர்வாகக் குழுவின் செயலர் மாதவ ஸ்வர்ணா கூறினார். கத்தோலிக்க இளையோர் மன்றத்தலைவர் டெனிஸ் டிசில்வா இந்த தசரா கொண்டாட்டங்கள் மத நல்லிணக்கத்தை உருவாக்கி வருவதாகவும், செப். 28 நடைபெறவுள்ள இறுதி விழாவில் கத்தோலிக்க இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வளர்க்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.