2009-09-25 10:29:29

செப். 26. இந்நாள் நற்செய்தி


லூக்கா நற்செய்தி, அதிகாரம் 9: 18 -22

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார். அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள். ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.








All the contents on this site are copyrighted ©.