2009-09-24 17:11:37

"Caritas in Veritate" சுற்றுமடல் நாம் வாழும் காலக்கட்டத்திற்கு ஏற்ற மடல் - கர்தினால் பஞாஸ்கோ


செப். 25, 2009 திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் அண்மையில் வெளியிட்ட "Caritas in Veritate" சுற்றுமடல் திருச்சபையின் சமூகப் படிப்பினைகள் வரலாற்றில் முக்கியமானதொரு மைல்கல் என இத்தாலிய ஆயர்களின் பேரவையின் தலைவர் கர்தினால் அன்ஜெலோ பஞாஸ்கோ கூறியுள்ளார்.

ஆயர்களின் நிரந்தர அவையின் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கர்தினால் பஞாஸ்கோ எவ்வாறு "Rerum Novarum", "Populorum Progressio"  ஆகியத் திருத்தந்தையினரின் மடல்கள் அந்தந்த காலக் கட்டத்தில் எழுந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமைந்ததோ, அதேபோல், நாம் வாழும் இன்றைய காலக்கட்டத்தில் உலகமயமாக்கல் என்ற வாழ்வு முறையை மனதில் கொண்டு எழுதப்பட்ட மடல் "Caritas in Veritate" என்று குறிப்பிட்டார்.
திருச்சபைக்கும், உலகிற்கும் இந்த மடல் வழியாக திருத்தந்தை எழுப்பியுள்ள சவால்களுக்காக அவரை இத்தாலிய ஆயர்களின் பேரவையின் சார்பாக தான் பாராட்டுவதாகவும் கர்தினால் பஞாஸ்கோ தன் உரையில் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.