2009-09-23 10:57:45

திருத்தந்தை பெலாருஸ் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள்பெலாருஸ் பேராயர்


செப். 23, 2009 திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் பெலாருஸ் நாட்டில் திருப்பயணம் மேற் கொள்வதற்கும் ரஷ்ய ஆர்தொடாக்ஸ் பிதாப்பிதாவை நேரடியாகச் சந்திப்பதற்கும் இருக்கும் வாய்ப்புகள் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் மின்ஸ்க்-மொஹிலெவ் பேராயர் ததேஉஸ் கொந்த்ருசிஎவிச்.

ரஷ்ய ஆர்தொடாக்ஸ் பிதாப்பிதா கிரில் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட்டை பெலாருஸ் நாட்டில் சந்திப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லையெனினும், அத்தகையதொரு வாய்ப்பு குறித்த செய்தியே மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார், பேராயர்.
பெலாருஸ் குடியரசின் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் லூகசெங்கோ ஏற்கனவே திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டிய பேராயர், பல ஆண்டுகளாக பெலாருஸ் மக்கள் திருத்தந்தையின் திருப்பயணத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.