2009-09-23 16:24:08

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசின் பொது நலத் திட்டம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் - ஆயர் வில்லியம் மர்பி


அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசு வழங்கும் பொது நலத் திட்டம், அந்நாட்டிற்கு சட்டபூர்வமான அனுமதி இன்றி குடிபெயர்ந்து வருபவர்களுக்கும் சேர்த்து, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நியூயார்க் ராக்வீல் மையத்தின் ஆயர் வில்லியம் மர்பி (William F Murphy) கூறியுள்ளார். அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித மேம்பாடு குழுவின் தலைவராக உள்ள ஆயர் மர்பி, "சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் நுழைவது வெகுவாகப் பரவி வரும் ஒரு பிரச்சனை என்றாலும், பொது நலத் திட்டத்திலிருந்து இவர்களை விலக்கி வைப்பது சரியல்ல." என்று கூறினார்.

அனுமதி இன்றி நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு பொது நலத் திட்டத்தில்  இடம் இல்லை என அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர் பாரக் ஒபாமா அண்மையில் கூறியுள்ளது தங்களுக்குக் கவலையைத் தருவதாகவும், இந்தக் கூற்றினால், அனுமதி பெற்று நாட்டுக்குள் குடிபெயர்ந்தொரும் இத்திட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள்  இருப்பதாகவும், இஸ்பானிய ஆயர்கள் பலர் இத்திட்டத்தை அமல் படுத்த உள்ள செனட் அங்கத்தினர்களைக் கண்டு பேசி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.