2009-09-21 16:10:30

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


செப். 20. அமைதிப் பணிகளை ஆற்ற முனைபவர்கள் ஒவ்வொருவரும், முதலில் அமைதியின் மனிதர்களாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புறங்களில் பொய் மற்றும் வன்முறைக்கான எண்ணங்களை, வார்த்தைகளை மற்றும் செயற்பாடுகளைக் கைவிட்டு, அடுத்தவர் மீதான மதிப்பை, புரிந்துகொள்ளுதலை, அக்கறையை வளர்த்துக் கொள்வர்களேயானால், அது நம் தினசரி பிரச்னைகளுக்குத் தீர்வாக இல்லாமல் இருந்தாலும், அப்பிரச்னைகளை நியாயமுடனும் ஊக்கமுடனும் எதிர்கொள்ள பலத்தை தரும் என்றார் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரையின் போது.

புனித யாகப்பரின் எழுத்துக்களை மேற்கோள் காட்டிய பாப்பிறை, பொறாமை, தேவையற்ற வாக்குவாதம்,ஒழுங்கீனம் மற்றும் அனைத்து விதமான தீமைகளையும் பொய்ஞானம் வழங்கும் வேளை, மேலிருந்து வரும் உண்மை அறிவானது பரிசுத்தமானதாய், அமைதியும் தாழ்ச்சியுமுடையதாய், கருணையும் நற்கனியும் பகுபாடற்ற நிலையும் நிறைந்ததாய் உள்ளது என்றார்.

இவ்வார இறுதியில் செக் குடியருசுக்கு தான் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், அத்திருப்பயணம் வெற்றிபெற செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இன்றைய உலகில் ஆயுத மோதல்களால் மக்கள் இறப்பது கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற அழைப்பும் அவரால் விடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.