2009-09-18 16:14:36

வத்திக்கான் அருங்காட்சியகத்தின் புதுபிக்கப்பட்ட பகுதிகள் திறக்கப்பட்டன. 


செப். 19, 2009 கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் வத்திக்கான் அருங்காட்சியகத்தின் புதுபிக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் அண்மையில் திறக்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு முனைவர் அன்டோனியோ பவுலுச்சி (Antonio Paolucci) அவர்களின் கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்ட புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கணினி மூலம் முன்பதிவு செய்யும் வசதியால் பார்வையாளர்கள் வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலையும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவுகளில் அருங்காட்சியகம் திறக்கப்படுவது அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சி.
அருங்காட்சியகத்தைச் சுற்றி காட்டும் வழிகாட்டிகள் ஆங்கிலத்தை இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்ளவும் பவுலுச்சி ஏற்பாடு செய்துள்ளார். 'இறை வெளிப்பாட்டின் பணியாளர்கள்' என்ற துறவற சபையைச் சார்ந்த கன்னியர்கள் பலர் அருங்காட்சியக வழிகாட்டிகளாகப் பணிபுரிய முன் வந்துள்ளது குறிப்பிட தக்கது.







All the contents on this site are copyrighted ©.