2009-09-18 16:12:34

ரோமையிலுள்ள யூதர்களுக்குத் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 


செப். 19, 2009 ரோமையிலுள்ள யூதர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட். நெருங்கி வரும் யாம் கிபூர், ரோஷ் ஹஷானா ஆகிய யூத விழாக்களையொட்டி திருத்தந்தை இந்த வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

தலைமைக் குரு ரிக்கர்தோ டி செங்னிக்கு அனுப்பிய வாழ்த்துத் தந்தியில், ரோமையின் யூதத் தொழுகை கூடத்திற்கு அக்டோபரில் வர எண்ணியுள்ளதாகத் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் 1986 இல் ரோமையின் யூதத் தொழுகை கூடத்திற்கு சென்று வரலாறு படைத்த முதல் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் கத்தோலிக்க - யூத உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதுவரை அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் யூதத் தொழுகை கூடங்களுக்கு சென்றிருக்கிறார். மே மாதம் புனித நாட்டுத் திருப்பயணத்தின் போது, நாஸி சித்ரவதை முகாம்களில் துன்பம் அனுபவித்து இன்றும் வாழ்ந்து வரும் யூதர்களை அவர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.