2009-09-18 16:13:58

இந்தியாவின் பக்தி இலக்கியங்களை ஆய்வு செய்வது மிகவும் அவசியம் - கத்தோலிக்க பேராசிரியர் 


செப். 19, 2009 பெல்ஜியம் நாட்டில் லூவேன் கத்தோலிக்கப் பல்கலை கழகத்தில் பல ஆண்டுகள் பணி புரியும் வினாந்து கல்லேவார்ட் (Winand Callewaert) என்ற கத்தோலிக்க பேராசிரியர், இந்தியாவின் பக்தி இலக்கியங்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்வது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். ப்ரஸ்ஸெல்ஸ் நகரில் அண்மையில் பேராசிரியர் கல்லேவார்ட் எழுதிய "பக்தி அகராதி" என்ற நூலை வெளியிடும் போது இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் ராஞ்சி பல்கலை கழகத்தில் 1965 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி, சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டப் படிப்பு மேற்கொண்ட பேராசிரியர் கல்லேவார்ட், இந்தியாவில் பல ஆண்டுகள் பணியும் செய்துவந்தார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்தியத் தூதர் ஜெமினி பக்வதி (Jemini Bhagwati) கத்தோலிக்கரான கல்லேவார்ட் மேலை நாட்டவர் என்றாலும், இந்திய பாரம்பரியங்களைச் சரிவரப் புரிந்து கொண்டவர் என அவரைப் பாராட்டினார்.








All the contents on this site are copyrighted ©.