2009-09-17 15:18:08

பேராயர் ஆஸ்கர் ரோமேரோவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் ஒரு இசை நாடகம் 


செப். 18, 2009. 1980 ஆம் ஆண்டு எல் சல்வடோரில் திருப்பலி ஆற்றிகொண்டிருக்கும் போது சுட்டு வீழ்த்தப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரோமேரோவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் ஒரு இசை நாடகம் லண்டனில் இம்மாத இறுதியில் அரங்கேற்றப்படும்.

லியாம் பவுரஸ் (Liam Bauress), ஜார்ஜ் டேலி (George Daly), ரிச்சர்ட் பென்போ (Richard Benbow), இவர்களால் உருவாகும் இந்த இசை நாடகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பல இடங்களில் அரேங்கற்றப்படும்.

இந்த நாடகத்தை அரங்கேற்றுவதன் மூலம் திரட்டப்படும் நிதி எல் சல்வடோர் நாட்டின் குடிபெயர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
பேராயர் ஆஸ்கர் ரோமெரோ முத்திபேறு பட்டத்திற்குத் தகுதியானவர் என்று திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.