2009-09-16 16:21:03

மனித மேம்பாட்டில் மதங்களின் பங்கு - டோனி ப்ளேர்.   


செப். 17, 2009. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் வத்திக்கான் செய்தித்தாள் லாசர்வதொரே ரொமானோவுக்கு (L’Osservatore Romano) அளித்த பேட்டியில் உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கும், மனித சமுதாயத்தின் போது நலத்திற்கும் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மிக அவசியம் என்று கூறினார்.

அண்மையில் திருத்தந்தை வெளியிட்ட  “Caritas in Veritate” சுற்று மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தாம் முற்றிலும் ஏற்றுக்கொள்வதாக கூறினார் என்று அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.

உலக அளவில் நிலவி வரும் பல கருத்து வேறுபாடுகளை நீதியான முறையில் தீர்ப்பதற்கு சமயம் சார்ந்த விசுவாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கடவுளற்ற மனிதநல கோட்பாடு மனித நேயமற்றது எனவும், மனிதர்களின் அறிவுத்திறன், செயல்பாடுகள் விசுவாசத்துடன் இணையாவிட்டால், அவை குறைவுள்ளது; அவ்வகை செயல்பாடுகள் ஆபத்திற்கு இட்டுச் செல்லும் எனவும் திருத்தந்தை தன் சுற்று மடலில் கூறியுள்ளதை முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.