2009-09-16 10:12:02

புனித பூமியில் சிறுபான்மை மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்கிறார் யெருசலேம் பிதாப்பிதா.


புனித பூமியில் சிறுபான்மை மதத்தவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவது மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளார் எருசலேமின் லத்தின்ரீதி பிதாப்பிதா Fouad Twal.

60 ஆண்டுகளுக்கு முன்னால் புனித பூமியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காடு இருந்தது. இப்போது 2 விழுக்காடாக குறைந்துள்ளது என்று கவலையை வெளியிட்ட பிதப்பிதா, தற்போது யெருசலேமில் 10 ஆயிரமாக இருக்கும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் ஏறத்தாழ 5000மாகக் குறையும் எனவும் உரைத்தார்.

West Bankல் இஸ்ராயேலால் கட்டப்பட்டுள்ள பிரிவினைச் சுவரால், மக்கள் போதிய மருத்துவ, கல்வி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைப் பெறமுடியா நிலை இருப்பதாகவும் கவலையை வெளியிட்டார் அவர்.








All the contents on this site are copyrighted ©.