2009-09-16 10:09:48

ஏழைகளுக்கான மருந்துவ உதவிகள் பாதிப்படைந்துள்ளன என்கிறார் திருப்பீட நல அதிகாரி.


செப்.16, 2009. இன்றைய அவசரகால மருந்துப் பொருட்களின் தயாரிப்பு என்பது, பாரம்பரிய மருத்துவ ஒழுக்க நீதி கோட்பாடுகளால் அல்ல, மாறாக, பணத்தின் ஆசையால் தூண்டப்பட்டதாக உள்ளது என கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீட அதிகாரி பேராயர் Zygmunt Zimowski.

கத்தோலிக்க மருந்தாளர்களுக்கென போலந்தில் இடம் பெற்ற சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நலப்பணி ஆணையத்தின் தலைவர் பேராயர் Zimowski, இன்றைய உலகில் அடிப்படையான வாழ்வைக்  காப்பாற்றும்  மருந்து பொருட்கள் குறைவு படுவது,  ஒரு மனிதகுல மற்றும் நல ஆதரவு சீர்கேட்டை நோக்கி எடுத்துச் செல்வதாக உள்ளது என்றார்.

ஏழை நாடுகளில் சாதாரண நோய்களால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்கான காரணம் என்னவென்றால், அவைகளுக்கான மருந்துகள் மூலம் பெருமளவு லாபம் கிட்டுவதில்லை என்பதேயாகும் எனவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்  திருப்பீடத்தின் நல அதிகாரி.

பொருளாதார காரணங்களுக்காகவே ஏழை நாடுகளுக்கான பல மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதேயில்லை எனவும் கூறினார் பேராயர் Zimowski.








All the contents on this site are copyrighted ©.