2009-09-16 16:22:34

இத்தாலிய குரு தவறான இணையத் தளங்களை அடையாளம் காட்டினார். 


செப். 17, 2009. இத்தாலிய குருவான அருட்தந்தை போர்த்துனாதோ டி நோடோ (Fortunato di Noto) உருவாக்கிய மீட்டர் சங்கத்தின் (Meter Association) உதவியுடன் சிறுவர், சிறுமியரைத் தவறான முறையில் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான இணைய தளங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இத்தாலியிலும் துண்டிக்கப்பட்டதோடு, அத்தகைய இணைய தளங்களை நடத்தி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சிசிலியில் பிறந்த அருட்தந்தை டி நோடோ மீட்டர் கழகத்தின் வழியாக கடந்த ஆறு மாதங்களாக இத்தகைய சட்டத்திற்கு புறம்பான இணையத் தளங்களைக் கவனித்து, தகவல்கள் சேகரித்து, இப்போது இத்தாலிய காவல் துறையினருக்கு இந்த தகவல்களை அளித்தார்.
குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் இத்தகைய கொடூரத்திற்கு பயன்படுத்தும் வக்கிர எண்ணம் உடையவர்களை எல்லாரும், சிறப்பாக, தொடர்பு சாதனங்களில், இணையத் தளங்களில் பணி புரியும் அனைவரும் இனம் கண்டு அவர்கள் செய்து வரும் செயல்களை வேரறுக்க வேண்டும் என அருட்தந்தை டி நோடோ வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.