புனித கொர்னீலியுஸ்: பேரரசன் தேஷியன் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கட்டவிழத்து
விடப்பட்ட கொடுமைகள் குறைந்த பிறகு, 251 ஆம் ஆண்டு 16 ஆயர்களால் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட
புனித கொர்னீலியுஸ் இரு ஆண்டுகள் பதவியில் இருந்தார். அதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த
கொடுமைகளுக்குப் பயந்து, கிறிஸ்துவை மறுதலித்த பலர், மீண்டும் மனம் திரும்பி கிறிஸ்துவை
ஏற்றுகொள்வதற்கு புனித கொர்னீலியுஸ் உதவியாக இருந்தார். மீண்டும் திருச்சபைக்கு எதிராக
வெடித்த கலவரங்களினால் இவர் நாடு கடத்தப்பட்டு, 253 இல் காலமானார்.