திருத்தந்தை 7ம் பத்திநாதர் நாடு கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட நாட்களில் அன்னைமரியாவை
மன்றாடினார். விடுதலையும் அடைந்தார். இதற்கு நன்றியாக அவர் வியாகுல அன்னை விழாவைக் கொண்டாடப்
பணித்தார். பழைய ஏற்பாட்டில், யூதித், தம் மக்களை அவர்களின் இழிநிலையிலிருந்து காத்தது
போல வியாகுல அன்னை உலக மக்களை மீட்பதற்கு கல்வாரி சிலுவை வரை சென்றாள்.
இதே செப்டம்பர்
15,
1254 - இத்தாலிய நாடுகாண் பயணி மார்க்கோ போலோ பிறந்தார்.
1821 - ஸ்பெயினிடமிருந்து
கோஸ்டா ரிக்கா, எல் சால்வதோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை
அறிவித்தன.
1835 – சார்ல்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று
உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
1883 – பம்பாய்
இயற்கை வரலாறு கழகம் நிறுவப்பட்டது.
1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை
சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது
1935 - நாத்சி ஜெர்மனி சுவஸ்திக்காவுடன் கூடிய புதிய
தேசிய கொடியை அறிமுகப்படுத்தியது.
1981 – வனுவாத்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
உறுப்பினரானது.
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.