2009-09-12 16:18:36

ஹெப்பகொடியில் கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டிருப்பது அம்மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட சதிவேலை, அம்மாநில முதல்வர்


செப்.12,2009. கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள ஹெப்பகொடியில் புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டிருப்பது அம்மாநில ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட சதிவேலை என்று அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார்.

கர்நாடக மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதி அளித்துள்ள முதலமைச்சர், தனது அரசு, கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களுடன் இணக்கமாக வாழவே விரும்புகின்றது என்று கூறினார்.

தனது அரசு, சமுதாய நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றது என்று கூறிய அவர், கிறிஸ்தவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் உறுதி வழங்கினார்.

இவ்வியாழன் அதிகாலை கெடுமதிக்காரர்கள் ஆலயத்தினுள் நுழைந்து இயேசு மரி திருவுருவச் சிலைகளை அகற்றியுள்ளனர். இதனால் கத்தோலிக்கர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.








All the contents on this site are copyrighted ©.