2009-09-12 16:13:47

திருத்தந்தை பானம நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசுத் தலைவர் அழைப்பு


செப்.12,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பானம நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசுத் தலைவர் ரிக்கார்தோ மார்த்தினெல்லி அழைப்பு விடுத்துள்ளார்.

பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கண்டோல்போவில் இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையைச் சந்தித்த பானம நாட்டுத் தலைவர், அந்நாட்டின் தற்போதைய சமூகக் கொள்கைகளையும் எடுத்துச் சொன்னார்.

கிறிஸ்தவ விழுமியங்களையும் பொது நலனையும் மேம்படுத்துவதில் அரசு தலத்திருச்சபையோடு சேர்ந்து வேலை செய்கின்றது என்பதையும திருத்தந்தையிடம் அவர் எடுத்துச் சொன்னார்.

மத்திய அமெரிக்க நாடான பானமாவின் 33 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

மேலும், அமெரிக்காவில் முதல் கத்தோலிக்க ஆலயம் எழுப்பட்டதன் 500ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கென 2013ம் ஆண்டில் திருத்தந்தை பானமாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பானமாவில், 1510ம் ஆண்டு, தாரியென் புனித மரியா ஆலயம் கட்டப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.