2009-09-12 16:18:15

சீன மறைபோதகர் இயேசு சபை அருட்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டை சிறப்பிப்பதற்கான தயாரிப்புகள், சீனாவில் வெகு மும்முரமாக நடை பெற்று வருகின்றன


செப்.12,2009. சீனாவில் மறைபோதகராகப் பணியாற்றிய இயேசு சபை அருட்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டை சிறப்பிப்பதற்கான தயாரிப்புகள், சீனாவிலும், அவர் பிறந்த இத்தாலியிலும் வெகு மும்முரமாக நடை பெற்று வருகின்றன.

சீனாவின் மூன்று முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றான நன்ஜிங் அருங்காட்சியகம் அருட்தந்தை மத்தேயு ரிச்சி பற்றிய விபரங்களை 2010ம் ஆண்டில் வைக்கவுள்ளது.

தாய்பேய், மக்காவோ, இன்னும் பிற மூன்று நகரங்களில் அக்குருவின் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்படும். மேலும் அவர் பற்றிய அருங்காட்சிகளும் வைக்கப்படும்.

1578ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிலிருந்து புறப்பட்ட அருட்தந்தை மத்தேயு ரிச்சி, முதலில் கோவா சென்றார். பின்னர் 1601ம் ஆண்டில் பெய்ஜிங் சென்றார். இக்குரு இறக்கும் வரை தலைநகரிலேயே தங்குவதற்குச் சீனப் பேரரசர் அனுமதியளித்தார். இயேசு சபை அருட்தந்தை மத்தேயு ரிச்சி 1610 ம் ஆண்டு மே 11ம் தேதி இறந்தார்.

 








All the contents on this site are copyrighted ©.