2009-09-10 16:42:03

மலேசியா - தெ ல சால் சகோதரர்களுக்கு அரசின் பாராட்டு. 


கல்விக்கு ஆற்றி வரும் பணிக்காக தெ ல சால் சபையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களை ‘டாடுக்’ (Datuk) என்ற பட்டம் அளித்து மலேசியா அரசு கௌரவித்துள்ளது. இங்கிலாந்தில் வழங்கப்படும் வீரத்திருத்தகைப் பட்டம் (knighthood) போன்றது மலேசியா அரசு வழங்கும் ‘டாடுக்’ பட்டம்.

பினாங்கில் 1852 இல் ஆரம்பிக்கப்பட்ட புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பணி புரிந்த மைக்கில் ஜாக்ஸ், (Michael Jaques) பால் ஹோ (Paul Ho) லாரன்ஸ் ஸ்பிட்ஜிக் (Lawrence Spitzig) என்ற மூன்று சகோதரர்களுக்கும் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

புனித சேவியர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த மூவரையும் சிறப்பிக்கும் வண்ணம் அண்மையில் விழாவொன்றை ஏற்பாடு செய்தனர். விழாவின்போது முன்னாள் மாணவரும், இந்நாள் அரசியல்வாதியுமான கோச் செங் டேய்க் (Goh Cheng Teik) தெ ல சால் சகோதரர்கள் கடந்த 157 ஆண்டுகளாக மலேசியாவில் ஆற்றி வரும் சேவைக்கு உரிய சன்மானத்தை அரசு வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.