2009-09-10 16:43:36

பிலிப்பைன்ஸ் - குழந்தைகள் பசியையும், அறியாமையையும் போக்கும் சகோதரிகள்  


பிலிப்பைன்ஸ் நாட்டில் இரிகா (Iriga City) நகரில் புனித அகஸ்டின் சபையைச் சேர்ந்த 12 சகோதரிகள் நடத்தி வரும் அனாதை இல்லத்தின் மூலம் பல குழந்தைகள் உணவும், கல்வியும் பெறுகின்றனர்.

மனித மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட பாத்திமா மையத்தில் "உணவு நாள்" என்று ஒரு நாளை அறிமுகப்படுத்தி அன்று அங்கு வரும் குழந்தைகளுக்குப் பல்வகை சக்தி தரும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வரும் உதவித் தொகையைக் கொண்டு இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

 இந்த மையத்தின் இயக்குனரான சகோதரி ரியா மே பார்துனா (Rhea Mae Fortuna) இதைப்பற்றி கூறுகையில், இரு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வருடக் குழந்தையாக அங்கு சேர்க்கப்பட்ட சே-சே (Che-Che) மையத்திற்கு வரும்போது 5 கிலோ எடையுடன் மிகவும் மெலிந்த நிலையில் வந்து சேர்த்தாள் என்றும், இப்போது அக்குழந்தை 23 கிலோ எடையுடன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாள் எனவும் சகோதரி கூறினார்.
1974 இல் புனித அகஸ்டின் சபையைச் சேர்ந்த இரு சகோதரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாத்திமா மையம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அந்தப் பகுதியில் வாழும் வீடற்ற அனாதைகள், இன்னும் பல வறியோருக்கு சிறந்த பணி ஆற்றி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.