2009-09-10 16:16:39

செப்டம்பர் 11 புனித பெரிய பாப்னுசியுஸ் விழா


எகிப்தியரான பாப்னுசியுஸ், புனித வனத்து அந்தோணியாரின் வழிகாட்டுதலில் பாலைவனத்தில் சில ஆண்டுகள் செலவழித்தார். கொடுங்கோலன் மாக்ஸிமினியுஸ் த்ராக்ஸ் அடக்குமுறையின் இவரது வலது கண்ணைக் கிழித்தனர். இடது முழங்காலை முறித்தனர். பின்னர் சுரங்களில் வேலை செய்ய அனுப்பி வைத்தனர். நாட்டில் அமைதி திரும்பிய பின்னர் இவர் மீண்டும் திருச்சபைப் பணிகளைத் தொடங்கினார்.

1226 – கத்தோலிக்கத் திருச்சபையில் திருப்பலிக்கு வெளியே பொதுவில் திருநற்கருணை ஆராதனை செய்யும் வழக்கம் அடைபட்ட துறவு மடங்களிலிருந்து பங்குகளுக்கு பரவியது.

1609 – ஹென்ரி ஹட்சன், மன்ஹாட்டன் தீவைக் கண்டு பிடித்தார்.

1893 - முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு நடைபெற்றது

1961 – உலக வனவிலங்கு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது.

1921 ல் சுப்பிரமணிய பாரதியும்

1948 ல் முகம்மது அலி ஜின்னாவும் இறந்தனர்.

செப்டம்பர் 11 - இலத்தீன் அமெரிக்க ஆசிரியர் தினம்








All the contents on this site are copyrighted ©.