2009-09-10 16:41:25

இந்தியாவில் கத்தோலிக்க இந்து மக்களின் ஒற்றுமை முயற்சிக்கு குழந்தைகள் வழி காட்டினர். 


அன்னை மரியா பிறந்த விழாவான செப் 8 ஆம் தேதியை ஒட்டி நடைபெற்ற நவநாள் முயற்சிகளும், அறுவடைத் திருவிழாவும் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டன. திருவிழா நாட்களில் அன்னைக்கு காணிக்கை செலுத்த சிறுவரும், சிறுமியரும் பூக்களைச் சேகரித்தனர்.

இந்த முயற்ச்சியால் இந்து, கிறிஸ்தவ குடும்பங்களிடையே மீண்டும் நல்லெண்ணம் வளர்ந்து வருகிறது என்று கர்நாடக மாநில கிறிஸ்துவர்களின் பிரதிநிதியாக அருட் தந்தை பாவுஸ்டின் லோபோ (Faustin Lobo) கூறினார்.
அண்மைக் காலங்களில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு சில சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே நிலவி வந்த சமாதானத்தைக் குலைத்தது. குழந்தைகள் மேற்கொண்ட மலர் சேகரிக்கும் முயற்சி மீண்டும் இந்த இரு பிரிவினருக்குமிடையே ஒற்றுமையை ஓரளவாகிலும் வலுப்படுத்தியுள்ளது என அருட்தந்தை ஸ்டானி மிராண்டா (Stany Miranda) கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.