2009-09-09 16:11:47

காங்கோ அப்பாவி பொது மக்கள் உகாண்டா புரட்சிப் படையால் தாக்கப்படுகிறார்கள், மறைபோதகக் குரு கவலை


செப்.09,2009. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு மாகாண குடிமக்கள் உகாண்டா நாட்டு புரட்சிப் படையால் தாக்கப்பட்டு வருவது குறித்த கவலையை தெரிவித்தார் காங்கோவில் மறைப்பணியாற்றும் கொம்போனி மறைபோதகக் குரு ஒருவர்.

புரட்சிப் படையினரின் தொடர் தாக்குதல்களால், துங்கு மறைப்பணித் தளத்திலிருந்த 25 கிராமங்கள் ஐந்தாகவும், துரு மறைப்பணி தளத்திலிருந்த 50 கிராமங்கள் ஏழு ஆகவும் குறைந்துள்ளன என்று உரைத்த குரு எலிசேயோ தக்கெல்லா, 70 விழுக்காட்டுக்கு அதிகமான கிராமங்கள் காணாமற்போயுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார் வலுக்கட்டாயமாகப் படைப் பிரிவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உகாண்டா மொழியும் கற்றுக் கொடுக்கப்படுகின்றனர் என்றும் அக்குரு மிஸ்னா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உகாண்டா நாட்டு புரட்சிப் படையின் தலைவர் காங்கோ மற்றும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு எல்லைப்புறத்தில் மறைந்திருப்பதாக அண்மையில் தகவல் கிடைத்ததாகவும் கொம்போனி மறைபோதகக் குரு கூறினார்







All the contents on this site are copyrighted ©.