2009-09-08 16:45:12

திருப்பீட அதிகாரி ஒருவர் தாய்வானில் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டார்


செப்.08,2009 தாய்வானில் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அம்மக்கள் மீது கொண்டிருக்கும் கரிசனையையும் திருப்பீட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிறரன்புப் பணியாளர்கள் தாய்பேயில் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்ற, கோர் ஊனம் என்ற திருப்பீட பிறரன்பு அவைத்தலைவர் கர்தினால் பவுல் யோசெப் கோர்டெஸ், தெற்கு தாய்வானில் மோராகாட் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டார்.

திருத்தந்தை அம்மக்கள் மீது கொண்டிருக்கும் கரிசனையையும் தெரிவித்து அவர்களுக்கென அவர் அனுப்பிய உதவித் தொகையையும் அளித்தார் கர்தினால் கோர்டெஸ்.

இஞ்ஞாயிறன்று தாய்வானில் புயலில் இறந்தவர்களுக்கான திருப்பலியை நிகழ்த்தி அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டார் திருப்பீட அதிகாரி கர்தினால் கோர்டெஸ்.

இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்த ஐந்து நாள் கருத்தரங்கில் 29 நாடுகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட பேராயர்கள், ஆயர்கள் இன்னும் 450 திருச்சபையின் பிறரன்புப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.