2009-09-08 16:55:30

ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மேலும் ஆறு பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது மக்களின் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது, திருச்சபைத் தலைவர்கள்


செப்.08,2009 கடந்த ஆண்டில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மேலும் ஆறு பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது மக்களின் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது என்று அம்மாநில திருச்சபைத் தலைவர்கள் கூறினர்.

புல்பானி நீதிமன்றம் இத்திங்களன்று ஆறு பேருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அவர்கள் அபராதத்தைச் செலுத்தவில்லையெனில் தண்டனை காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மக்களின் ஒழுங்குணர்வுகளை வலுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

நீதி தன் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளது என்ற உணர்வை மக்களுக்குக் கொடுத்துள்ளது என்றும் பேராயர் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் ஐம்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்தனர்.








All the contents on this site are copyrighted ©.