2009-09-08 16:52:29

இன்றைய புனிதர் - புனித பீட்டர் க்ளேவர்.  


ஸ்பெயினில் பிறந்த இவர் தனது 20 வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர் மயோர்கா என்ற இடத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அங்கே வாயில் காக்கும் எளிய பணிக்குத் தம்மையே அர்ப்பணித்துகொண்ட  புனித அல்போன்ஸ் ரோட்ரிகுவசினால் பெரிதும் ஈர்க்கபெற்றார். அவரது தூண்டுதலினால், கறுப்பின அடிமைகள் மத்தியில் உழைப்பதற்கு தன்னையே அர்ப்பணித்தார் பீட்டர். 44 ஆண்டுகள் மத்திய அமெரிக்காவில் உள்ள கார்தஜீனாவில் இந்த அடிமைகள் மத்தியில் கடினமாய்  உழைத்தார்.

இந்த அடிமைகளை மிருகங்கள் போல் நடத்தி வந்த அடிமை வியாபாரிகள் பீட்டருக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுத்தனர். அவைகளை எல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, பீட்டர் புன்முறுவலுடன் தன் பணியைத் தொடர்ந்தார். ஏறத்தாழ 300 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட அடிமைகள் இவரால் திரு முழுக்குப் பெற்றனர். தன்னுடைய பெயரைக் கையொப்பமிடும் போது, அடிமைகளின் அடிமை பீட்டர் என்று எழுதுவார்.

1654 ஆம் ஆண்டு செப். 9 ஆம் நாள் பீட்டர் காலமானார். இவரும் இவருடைய அடிமைப் பணிக்குப்  பெரிதும் தூண்டுதலாய் இருந்த புனித அல்போன்ஸ் ரோட்ரிகுவசும் 1888 இல் ஒரே நாளில் புனிதர் பட்டம் பெற்றனர். 13 ஆம் லியோ என்ற திருத்தந்தை  புனித பீட்டர் க்ளேவரை 1896 இல் கத்தோலிக்க மறைபரப்புப்  பணிகளுக்கு பதுகாவலாரென அறிவித்தார்.










All the contents on this site are copyrighted ©.