2009-09-07 16:30:40

ஆசிரியர்களை தேசிய ஞானிகள் என்றழைப்பதற்குத் திட்டமிடும் மத்திய பிரதேச மாநில அரசின் முயற்சிக்கு ஒரு கத்தோலிக்க பேராயர் எதிர்ப்பு


செப்.07,2009 ஆசிரியர்களை “தேசிய ஞானிகள்” என்றழைப்பதற்குத் திட்டமிடும் மத்திய பிரதேச மாநில அரசின் முயற்சிக்கு அம்மாநில கத்தோலிக்க பேராயர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய ஆசிரியர் தினமான செப்சடம்பர் 5ம் தேதி மத்திய பிரதேச அரசு இதனைத் தொடங்கிய வேளை, இது குறித்து எதிர்ப்பு தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, ஆசிரியர்களை “ஞானிகள்” என்று கௌரவிப்பதற்கான அரசின் திட்டம் நேர்மையான முறையில் சிந்தித்து எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறினார்.

சமயச் சார்பற்ற ஒரு நாட்டில் கல்வி நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றுரைத்த பேராயர் லியோ, இந்து தேசியவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இதனைத் தான் நோக்குவதாகக் கூறினார்.

இதற்கிடையே, மத்திய பிரதேச அரசின் இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஆசிரியர்கள், தங்களது ஊதியத்தைக் கூட்டித்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.