2009-09-05 17:06:10

மெக்சிகோவில் போதைப் போருள் வியாபாரிகள், தங்களின் வியாபாரத்திற்கு வறுமையில் வாடும் இளைஞர்களைப் பயன்படுத்துகின்றனர், தலத்திருச்சபை அதிகாரிகள்


செப்.05,2009 மெக்சிகோவில் போதைப் போருள் வியாபாரிகள், தங்களின் வியாபாரத்திற்கு வறுமையில் வாடும் இளைஞர்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தலத்திருச்சபை அதிகாரிகள் குறை கூறினர்.

ஒவ்வொரு நாளும் போதைப் போருள் வியாபாரத்தில் இணையும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறிய அந்நாட்டின் சிஹூவாஹூவா உயர்மறைமாவட்ட பேச்சாளர் அருள்திரு ஹோசே ஹேசுஸ் மாட்டா த்ரேஹோ, போதைப் பொருள் வியாபாரிகள் இளைஞர்களின் ஏழ்மையை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று கூறினார்.

இவ்வாரத்தில் மெக்சிகோவில் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்ட இளையோருக்கு மறுவாழ்வு வழங்கும் மையத்தில் செப வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது துப்பாக்கி மனிதர்கள் அத்துமீறி நுழைந்து சரமாரிச் சுட்டதில் 18 இளைஞர்கள் இறந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அருள்திரு ஹோசே, மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையில் போதைப் பொருள் வியாபாரத்தை நடத்துவது கடினமாக இருப்பதால் உள்ளூரிலே இவ்வியாபாரம் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

சிஹூவாஹூவாவில் இவ்வாண்டில் மட்டும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களால் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.












All the contents on this site are copyrighted ©.