2009-09-05 17:07:22

முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் உரிமைகளை மதிக்குமாறு மாஸ்கோ ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா கிரில் அழைப்பு


செப்.05,2009 முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் உரிமைகளை மதிக்குமாறு மாஸ்கோ ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா கிரில் அழைப்பு விடுத்தார்.

இவ்வெள்ளியன்று, மாஸ்கோ மீட்பராம் கிறிஸ்து பேராயலத்தில் இருபது அரபு நாடுகளின் அரசியல் தூதுவர்களை சந்தித்த போது இவ்வாறு கேட்டுக் கொண்ட பிதாப்பிதா கிரில், இசுலாமிய நாடுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் தேவைகளுக்குக் கவனம் செலுத்தப்படுவது, கிறிஸ்தவ-முஸ்லீம் உரையாடலுக்கு இன்றியமையாதது என்றும் கூறினார்.

அரபு நாடுகளிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ ஆலயங்களின் எண்ணிக்கை போன்று ரஷ்யாவில் முஸ்லீம்களின் மசூதிகளும் இருப்பது, இவ்விரு மதங்களுக்கிடையே காணப்படும் நல்லுறவின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.

இரஷ்யாவின் மொத்த மக்கட்தொகையில் 16 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










All the contents on this site are copyrighted ©.