2009-09-05 17:04:10

சமுதாயத்தில் அன்பு செய்யப்படாமலும் ஒதுக்கப்பட்டும் வாழ்வதைப் போன்ற ஏழ்மையைவிட வேறு கொடிய வேதனை இவ்வுலகில் எதுவும் இல்லை, அன்னை தெரேசா


செப்.05,2009 சமுதாயத்தில் அன்பு செய்யப்படாமலும் ஒதுக்கப்பட்டும் வாழ்வதைப் போன்ற ஏழ்மையைவிட வேறு கொடிய வேதனை இவ்வுலகில் எதுவும் இல்லை என, கல்கத்தா அன்னை தெரேசா நமக்குக் காட்டியிருக்கிறார் என்று அருட்சகோதரி மேரி பிரேமா கூறினார்.

இந்த ஏழ்மையைக் குணப்படுத்துவதற்கு, பொருளாதாரத்திலும் ஆன்மீகத்திலும் ஏழையிலும் ஏழையாக இருக்கும் மக்களுக்குக் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் பிரசன்னத்தையும் எடுத்துரைப்பவர்களாக நாம் வாழுமாறு அவர் நம்மை அழைத்திருக்கிறார் என்றும் அச்சகோதரி கூறினார்.

அருளாளர் அன்னை தெரேசா இறந்ததன் 12ம் ஆண்டை முன்னிட்டு செய்தி வெளியிட்ட, அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைபோதக சபைத் தலைவியான அருட்சகோதரி மேரி பிரேமா இவ்வாறு கூறினார்.

நாம் பெரிய செயல்களைச் செய்ய வேண்டியதில்லை, ஆனால் சிறிய செயல்களை அன்போடு செய்தாலே போதுமானது என்றும் அச்செய்தி கூறுகிறது.

அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களைக் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கியுள்ள பிறரன்பு மறைபோதக சபையினர், செப்டம்பர் 5ம் தேதி இச்சனிக்கிழமை அவரின் நினைவு நாளையும் சிறப்பித்தனர்.








All the contents on this site are copyrighted ©.