2009-09-03 16:29:38

போரிடுவது மதியற்ற செயல் - திருத்தந்தை


செப். 3, 2009. செப்டம்பர் 1 இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான நாளின் 70 ஆம் ஆண்டு நிறைவு. வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது, 1939 ஆம் ஆண்டு செப் 1 ஜெர்மானிய போர்கப்பல் ஒன்று போலந்து நாட்டு கோட்டையைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. ஆறு ஆண்டுகள் நடந்த இந்த போரில், 60 கோடிக்கும் மேலானோர் உயிரிழந்தனர். செப் 2 புதன் அன்று மறையுரை ஆற்றும் போது ஜெர்மனியில் பிறந்த திருத்தந்தை பெனெடிக்ட் போலந்து நாட்டிலிருந்து வத்திகான் வந்திருந்த திருப்பயணிகளை வரவேற்றுப் பேசுகையில் போரிடுவது மதியற்ற செயல், மக்கள் மன்னிப்பையும் சமாதானத்தையும் அதிகம் பின்பற்ற வேண்டும் எனவும் ஐரோப்பாவுக்கும் உலகத்திற்கும் இன்று சமாதானம் அதிகம் தேவை என்றும் வலியுறுத்தினார்.

 மேலும், செப்டம்பர் 1 ரஷ்யாவின் பிரதமர் வ்ளாடிமிர் புடின் ரஷியர்களுக்கும் போலந்து நாட்டவர்களுக்கும் இடையே இன்னும் அதிக நல்லெண்ணம் உருவாக வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். போலந்து நாட்டின் இரு பேராயர்கள் இந்த கடிதத்தை வெகுவாக வரவேற்று பாராட்டினர்.

பேராயர் ஹென்ரிக் முஷின்ஸ்கி தன் உரையில் “ரஷியாவின் ஒரு அரசியல் தலைவர் இது போன்ற முக்கிய கருத்தைக் கூறுவது இதுவே முதல் முறை என்றார். மேலும், ரஷியாவும் போலந்தும் இணைந்து இரண்டாம் உலகப்போரை வென்றாலும், போரின் காயங்களை, வேதனைகளை வெல்வதற்கு இரு நாடுகளும் சரிவர முயலவில்லை. எழுபது ஆண்டுகள் கழித்து, இப்போதாகிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல முயற்சி” என்று பேராயர் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.