2009-09-03 16:49:25

தைவானில் தலாய் லாமாவும் கர்தினால் ஷான் குவோவும் சந்தித்தனர் 


செப். 3, 2009. செப் 2 தைவானில் தலாய் லாமாவும் கர்தினால் ஷான் குவோவும் சந்தித்தனர். தைவான் நகரின் முக்கியமான அரங்கில் நடந்த இந்த சந்திப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தலாய் லாமா திபெத்திய மொழியில் ஒரு ஜெபம் சொன்னதும், கத்தோலிக்க பாடகர் குழு மாண்டரின் மொழியில் பாடல் ஒன்று பாட, கர்தினால் ஒரு ஜெபம் சொல்ல, கூட்டம் ஆரம்பமானது.

அன்பும், கருணையும் ஆழ்மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் வழி வகுக்கும் என்று இருவரும் கூறினர். பள்ளிகளில் இன்று ஆன்மீக மதிப்பீடுகள் சொல்லித்தரப்படுவதில்லை என தலாய் லாமா கூறினார். இதை ஆதரித்துப் பேசிய கர்தினால் ஷான் நன்னெறி   மதிப்பீடுகள்  அடங்கிய   பாடத்திட்டங்களை நமது பள்ளிகள் பின்பற்ற வேண்டும்  எனவும்  மத  நல்லிணக்கத்திற்கான  பாடங்கள் சொல்லித்தரபடவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இருவரும் சுற்று சூழலைப் பாதுகாப்பது பற்றியும் எடுத்துரைத்தனர்.

இந்த கத்தோலிக்க, புத்த மத உரையாடல் முயற்சியின் இறுதியில் இருவரும் தைவானைத்  அண்மையில் தாக்கிய சூறாவழியில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உலக சமாதானத்திற்காகவும்  வேண்டிக்கொண்டனர். இருவரும் வழங்கிய ஆசீரோடு இந்த சந்திப்பு முடிவடைந்தது.







All the contents on this site are copyrighted ©.